திண்டிவனம் நேரு வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் — கூடுதல் Traffic போலீசார் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை!
உயர்திரு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கனிவான பார்வைக்கு!
அய்யா!
பொருள்: திண்டிவனம் நேரு வீதியில் கடும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப் படுத்தி கட்டுக்குள் கொண்டுவர போதுமான போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டுதல் சம்பந்தமாக……
அய்யா! வணக்கம்!
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் ஒரு முக்கியமான நகரம்.
திண்டிவனம் நகரில் போக்குவரத்து ஒழுங்குபடுத்த திண்டிவனத்திற்கு என்று Traffic Inspector ஒருவரும் இரண்டு போக்குவரத்து காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர் . இவர்களால் Traffic ஐ control பண்ண முடியாமல் தவித்து வருகிறார்கள்.
திண்டிவனம் நகரத்திற்கு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் முதுநிலை காவலர்கள், காவலர்கள் போதுமான அளவில் இல்லாததால் நேரு வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
உயர்திரு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களே!
திண்டிவனம் காவல் உட்கோட்டத்திற்கு போதுமான போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இல்லாததை மாண்புமிகு முதல்வர் திரு ஜோசப் விஜய் அவர்கள் அரசிடம் தெரிவித்து போக்குவரத்து காவல் உதவிஆய்வாளர்கள் மற்றும் முதுநிலை காவலர்கள்,, காவலர்கள் என 25, 30 காவலர்களை திண்டிவனம் நகரத்திற்கு கேட்டு பெற்று பணி அமர்த்தி திண்டிவனம் நேரு வீதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினால் மக்கள் அன்றாடம் சந்திக்கும் இன்னல்களை தவிர்க்கலாம் மக்களும் சங்கடம் இல்லாமல் விபத்துகள் ஏற்படாமல், அல்லல் படாமல், அவதிப் படாமல், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகாமல் குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்றுவர ஏதுவாக இருக்கும். போக்குவரத்து நெரிசலையும் ஒழுங்கு படுத்த முடியும்.
எனவே பொதுமக்கள் நலன் கருதி தயவு கூர்ந்து ஆவன செய்ய வேண்டுகிறேன்.
நன்றி! வணக்கம்!
இப்படிக்கு
K.அசோகன்,
வழக்கறிஞர்,
பொது நல ஊழியர்,
திண்டிவனம்.
செல்: 9443323214.