பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் பச்சை வழி அம்மன் திருவிழா

திண்டிவனம் அருகிலுள்ள மாவு மில் பகுதியில் நடைபெறவுள்ள பச்சை வழி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்காக மிகப்பெரிய அன்னதான விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வரும் 25.05.2026 அன்று மதியம் 12.30 மணி முதல் இந்த அன்னதான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சுமார் 1000 பேருக்கு உணவு வழங்குவதுடன், குடிநீர் வாட்டர் பாட்டில்களும் பகிர்ந்து வழங்கப்பட உள்ளன.

இந்த திருவிழா நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெறுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். திருவிழாவை முன்னிட்டு அந்த பகுதி முழுவதும் பக்தி உற்சாகம் நிலவுகிறது.

இந்த அன்னதான ஏற்பாடுகளை குழுத் தலைவர் எஸ்.குமார், துணைத் தலைவர் கே.இளங்கோவன் மற்றும் செயலாளர் திரு.சந்துரு (ஏ) மன்னார் ஆகியோர் தலைமையில் சிறப்பாக செய்து வருகின்றனர்.

திண்டிவனம் பகுதியில் நடைபெறும் இந்த சமூக மற்றும் ஆன்மிக சேவை நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது