தேசிய ஜனநாயகக் கூட்டணி
2023 செப்டம்பர் 25 அன்று, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அதிமுக விலகியது. அதன் பின்னர் நடைபெற்ற 2024 பொதுத் தேர்தலில், அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணிகள் தனித்தனியாகப் போட்டியிட்டன; ஆனால் இரு தரப்பும் தமிழகத்தில் ஒரு இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை.
இதையடுத்து, 2025 ஏப்ரல் 11 அன்று இரு கட்சிகளும் மீண்டும் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கின. இந்த கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக, 2026 ஜனவரி 7 அன்று அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக, அதிமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது. மேலும், 2026 ஜனவரி 21 அன்று டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் இந்த கூட்டணியில் இணைந்தது.
பின்னர், 2026 மார்ச் 15 அன்று, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளுடன் இடப்பங்கீடு குறித்து ஆலோசிக்க, அதிமுக நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்தது.
| பாரதிய ஜனதா கட்சி | நயினார் நாகேந்திரன் |
| பாட்டாளி மக்கள் கட்சி | அன்புமணி ராமதாஸ் |
| அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் | டி. டி. வி. தினகரன் |
| தமிழ் மாநில காங்கிரசு | ஜி. கே. வாசன் |
| இந்திய ஜனநாயகக் கட்சி | தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து |
| அனைத்திந்திய பார்வர்டு பிளாக் | பி. வி. கதிரவன் |
| புதிய நீதிக் கட்சி | ஏ. சி. சண்முகம் |
| தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் | பெ. ஜான் பாண்டியன் |
| உழவர் உழைப்பாளர் கட்சி | மணிகண்டன் |
| தமிழ் மாநில முஸ்லிம் லீக் | சேக் தாவூத் |
| அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | எடப்பாடி க. பழனிசாமி |
| பசும்பொன் தேசியக் கழகம் | முத்தையா |
| பெருந்தலைவர் மக்கள் கட்சி | என். ஆர். தனபாலன் |
| புரட்சி பாரதம் கட்சி | ஜெகன்மூர்த்தி |
| சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் | ஆர். வி. பரதன் |