திண்டிவனம்

ஊர் அறிய உலகறிய

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்காக சிறப்பு செய்திகளையும், தகவல்களையும் வழங்கும் Thindivanam.com இணையதளத்தில், உங்கள் பங்களிப்பை வழங்க +91-9042013581 தொடர்பு கொள்ளவும் அல்லது email.thindivanam@gmail.com என்ற இணைய முகவரிக்கு அனுப்பவும்

ஸ்ரீ திந்திரிணீஸ்வரர் ஆலயம் கி.பி 10 ஆம் நூற்றாண்டில் மாமன்னர் ராஜ ராஜ சோழனால் சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது

ஸ்ரீ வால்மீகி முனிவரால் விமானம் பூஜிக்கப்பட்டது. இந்த கோவிலில் உள்ள லிங்கங்களை
திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி என்று நான்கு முனிவர்களால் பூஜிக்கப்பட்டது.

திருநாவுக்கரசு சுவாமிகளால் திண்டீச்வரம் என்ற வைப்பு தலமாக பாடப்பட்டுள்ளது

ஸ்ரீ திந்திரிணீஸ்வரர்
ஸ்ரீ பக்த ப்ரகலாதீஸ்வரர்
ஸ்ரீ ஞானபுரீஸ்வரர்
ஸ்ரீ கரகண்டேஸ்வரர்
ஸ்ரீ சுயம்புமூலநாதர்
ஆகிய 5 பஞ்சலிங்கம் உள்ள சிறப்பு வாய்ந்த தளமாக விளங்குகிறது

தேவார குறிப்பு

தெள்ளும் புனல் கெடில வீரட்டமும் (6-7-8)
திண்டீச்சரமும் திருப்புகலூர்
எள்ளும் படையான் இடைத்தானமும்
ஏயீச்சுரமும் நல் ஏமம் கூடல்
கொள்ளும் இலயத்தார் கோடிகாவும்
குரங்கணின் முட்டமும் குறும்பலாவும்
கள் அருந்தத் தெள்ளியார் உள்கி ஏத்தும்
காரோணம் தம்முடைய காப்புக்களே.

பூதப்படையை உடையவரும், கூத்தினை நிகழ்த்துபவரும், ஆகிய பெருமானார்
உகந்தருளியிருக்கும் திருத்தலங்கள் அதிகை வீரட்டம், திண்டீச்சரம், புகலூர்,
இடைத்தானம், ஏயீச்சுரம், ஏமம், கூடல், கோடிகா, குரங்கணில் முட்டம், குறும்பலா,
திருவடி ஞானம் பெறச் சத்திநி பாதம் பெற்றவர் தியானித்துத் துதிக்கும்
நாகை குடந்தைக் காரோணங்கள் என்பனவாகும்

திண்டீச்சரம், சேய்ஞலூர், செம்பொன்பள்ளி, தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை,
கொண்டீச்சரம், கூந்தலூர், கூழையூர், கூடல், குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு,
தேவர்கள் தொழும் அதிகை வீரட்டம், ஐயாறு, அசோகந்தி, ஆமாத்தூர், கண்டியூர் வீரட்டம்,
கருகாவூர் ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம்

தேவாலய திருப்பணி தொடக்க விழா: 19-09-1973

திருக்குட நன்னீராட்டு பெருவிழா: 08-04-2012

விநாயகர் சன்னிதி மஹா கும்பாபிஷேகம்: 03-06-1996

புதிய திருத்தேர் 17 லட்சம் மதிப்பீட்டில் 09-12-2002 அன்று தொடங்கப்பட்டு
02-05-2004 அன்று 25 வருடங்களுக்கு பிறகு தேரோட்டம் நடைப்பெற்றது

ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் 1889 ஆம் வருடம் இத்திருத்தலத்தில் 4 நாட்கள் தங்கி இருந்தார்.